பகலில் வடை வியாபாரம்..... இரவில் செயின் திருட்டு - காவல்துறையினரிடம் மாட்டிக்கொண்டு பலே திருடன்

 


தேனி மாவட்டம் கம்பம் பாரதியார் நகரை சேர்ந்தவர் ஆனந்த செல்வி (45). இவர் கடந்த 11ம் தேதி இரவு கடையில் வேலை முடிந்து இரவு வீட்டிற்கு நடந்து சென்றார்.

அப்போது ரொட்டி கடை சந்து பகுதியில் சென்றபோது எதிரே ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஆனந்த செல்வியின் கழுத்தில் இருந்த மஞ்சள் கயிறுடன் கூடிய 6 கிராம் தங்க தாலி மற்றும் கவரிங் செயினை பறித்து கொண்டு தப்பியோடிவிட்டார்.இதுகுறித்து  ஆனந்த செல்வி கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி வழக்கு பதிவு செய்து திருடனை தேடி வந்தனர். போலீசார் சம்பவம் நடைபெற்ற பகுதியில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியின் அடிப்படையில் மோட்டார் சைக்கிள் பதிவு எண்ணை கொண்டு விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையில் கம்பம் திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்த செந்தில்வேலவன் சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து அவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஆனந்தசெல்வியிடம் 6 கிராம் தங்க தாலி, ரூபாய் 600 மதிப்புள்ள கவரிங் செயினை பறித்தது தெரிய வந்தது. அவரிடமிருந்து தாலி, கவரிங் செயினை பறிமுதல் செய்த காவல்துறையினர் செந்தில்வேலவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.செந்தில்வேலவன் சாலை ஓரத்தில் பகல் நேரத்தில் வடை கடை நடத்தி வந்ததும், இரவு நேரத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments