நாகையில் குறுவை பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் தொகை கிடைக்காததை கண்டித்து அதிகாரிகளை சூழ்ந்து முறையிட்டதால் பரபரப்பு


நாகை மாவட்டத்தில் இந்தாண்டு குறுவை சாகுபடிக்கான பயிர் காப்பீடு செய்த விவசாயிகள் 2024 ஆம் ஆண்டுக்கான இன்சூரன்ஸ் தொகை வரவு வைக்கப்பட்ட போதிலும், பெரும்பாலான விவசாயிகளுக்கு இதுவரை இன்சூரன்ஸ் தொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உரிய பிரிமியம் தொகை கட்டியும் இதுவரை இன்சூரன்ஸ் தொகை வழங்கப்படாதவை கண்டித்து, விவசாயிகள் ஜன.10 ஆம் தேதி  திருக்குவளையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் அதற்கான அமைதி கூட்ட பேச்சுவார்த்தை திருக்குவளை வட்டாட்சியர் அலுவலகத்தில் தலைமையிடத்து துணை வட்டாட்சியர்  ராஜேந்திரன்  தலைமையில் நடைபெற்றது.

இதில் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மாநில துணை பொதுச்செயலாளர்  பிரகாஷ் உள்ளிட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.அப்போது இன்சூரன்ஸ் தொகை இதுவரை வங்கி கணக்கில் ஏராளமான விவசாயிகளுக்கு ஏறவில்லையென அதற்கு உரிய காரணத்தை கேட்டும், விடுபட்ட விவசாயிகளின் பெயர் பட்டியலை தரகோரியும் அதிகாரிகளை சூழ்ந்து கொண்டு  விவசாயிகள் முறையிட்டனர். மூன்று மணி நேரத்திற்கு மேலாக நீடித்த பேச்சுவார்த்தையில்  உரிய தீர்வு கிடைக்காததால் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்‌.

இதில் விவசாயிகள் சங்க ஒன்றிய துணைச் செயலாளர் ஏ.பி.சுகுமார், ஒன்றிய செயலாளர் ஆர். பக்கிரிசாமி , விவசாய சங்க நிர்வாகிகள் கே.கோவிந்தராஜன், டி. வெற்றிவேல், எஸ்.கண்ணன் ,ஏ. பாரூக் அமானுல்லா,ஆர். ராஜேந்திரன் உள்ளிட்ட விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.

மக்கள் நேரம் எடிட்டர்

நாகை மாவட்ட நிருபர்

ஜி.சக்கரவர்த்தி 

விளம்பர தொடர்புக்கு :

செல்: 978834183

Post a Comment

0 Comments