தமிழக அரசை கண்டித்து சாலை பணியாளர்கள் கருப்பு முக்காடு அணிந்து ஒப்பாரி வைத்து போராட்டம்



தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் தமிழக அரசை கண்டித்து, கருப்பு துணி முக்காடு போட்டு ஒப்பாரி போராட்டமானது நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், தென்காசி நகர பகுதியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட சாலை பணியாளர்கள் பங்கேற்று கருப்பு முக்காடு அணிந்து தமிழக அரசருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியதோடு மட்டுமல்லாமல், சாலை பணியாளர்களின் 41 பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும், மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

 தொடர்ந்து, கருப்பு முக்காடு அணிந்து தங்களது கோரிக்கைகளை ஒப்பாரி வைத்து தமிழக அரசிற்கு பறைசாற்றும் வகையில் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments