மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிகட்டு போட்டி இன்று காலை ஆறு முப்பது மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 1100 காளைகள் மற்றும் 900 மாடுபிடி வீரர்கள் இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்றுள்ளனர்.
தற்போது வரை 808 காளைகள் பரிசோதனை செய்யப்பட்டது 773 காளைகள் வாடிவாசலில் இருந்து அனுமதிக்கப்பட்டு போட்டியானது விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது
எப்போது வரை 41 நபர்கள் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது பத்தாவது10 வது சுற்று நடைபெற்று வருகிறது.ஒன்பதாவது சுற்றில் மதுரை விளாங்குடி பகுதியை சேர்ந்த நவீன் குமார் என்கிற மாடுபுடி வீரர்406 என்னில் விளையாடி வந்தார்.
இந்நிலையில் வாடிவாசலில் இருந்து வந்த காளை ஒன்று நவீன் குமாரின் மர்பில் குத்தியதால் மார்பிலும் முக்கிலும் ரத்தம் சிந்த சிந்த சிகிச்சைக்காக அவனியாபுரம் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார் இங்கு மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி செய்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்து வந்தனர்.
தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் நவீன் குமார் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
0 Comments