ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்..... திமுக தீவிர வாக்கு சேகரிப்பு


 ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் திமுக சார்பாக வி.சி சந்திரகுமார் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பாக சீதா லட்சுமி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அதிமுக மற்றும் பாஜக தேர்தலை புறக்கணித்துள்ளது. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் திமுகவுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் இடையே நேரடியாக நடைபெற உள்ளது. இதனால் அங்கு தேர்தல் களம் பரபரப்பு இல்லாமல் காணப்படுகின்றது.

அமைச்சர் முத்துசாமி தலைமையில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் சேர்ந்து திமுகவுக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர். இந்நிலையில் நேற்று திமுகவினர் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். அவர்கள் அமைச்சர் முத்துசாமி தலைமையில் வேட்பாளர் வி.சி சந்திரகுமார் மற்றும் நிர்வாகிகள் பெரியார் நகர் பகுதி, கள்ளுக்கடை மேடு, ஒடைப்பள்ளம் ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று திமுக ஆட்சியில் செய்த நலத்திட்டங்களை கூறி வாக்கு சேகரித்தனர்.

இதைத்தொடர்ந்து இன்று 2-வது நாளாக எல்.கே.சி ரோடு மாமலை வீதி போன்ற பகுதிகளிலும் ஒவ்வொரு வீடாக சென்று திமுகவுக்கு ஆதரவாக வாக்குகளை சேகரித்தனர். கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இ வி கே எஸ் இளங்கோவன் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்தமுறை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்று திமுகவினர் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர்.

Post a Comment

0 Comments