நடிகை சீதாவின் தாயார் காலமானார்

 


தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சீதா. இவர் தமிழ் மட்டுமின்றி பிறமொழிகளிலும் நடித்துள்ள நிலையில் தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அதோடு சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

 இவர் நடிகர் பார்த்திபனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் பின்னர் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அதன்பிறகு சீரியல் நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியான நிலையில் அவரையும் பிரிந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் நடிகை சீதாவின் தாயார் தற்போது வயது மூப்பு காரணமாக காலமானார். இவர் கடந்த வாரம் தான் இன்ஸ்டாகிராமில் தாயுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு என்னுடைய சாமி என்று பதிவிட்டு இருந்தார். 

அவர் பதிவிட்டு ஒரு வாரம் ஆகும் நிலையில் தற்போது வயது மூப்பு காரணமாக உயிரிழந்து விட்டார். அவர் தன் தாய் மரணம் குறித்து இன்ஸ்டாகிராமில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். மேலும் அவருக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறிவரும் நிலையில் தற்போது திரையுலக பிரபலங்கள் பலரும் நடிகை சீதாவின் வீட்டிற்கு விரைந்து வருகிறார்கள்.

Post a Comment

0 Comments