துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தையொட்டி ஆலங்குளத்தில் கல்லூரி மாணவனுக்கு மடிக்கணினியை முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன் வழங்கினார்.
திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தையொட்டி முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். இதன் தொடர்ச்சியாக சுரண்டை அரசு கலைக்கல்லுரியில் படித்து வரும் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி குறிப்பன்குளத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான சேவகப்பெருமாள் என்பவரின் மகன் சரவணன் சிவா என்பவருக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஆலங்குளம் பேரூராட்சி மன்ற தலைவர் சுதா மோகன்லால் தலைமை வகித்தார். முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் தங்கசெல்வம், பேரூர் திமுக பொருளாளர் சுதந்திரராஜன், கலை இலக்கிய பேரவை முன்னாள் துணை அமைப்பாளர் ஜி.எஸ். செல்வம்ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரதிநிதி அன்பழகன் வரவேற்று பேசினார். முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் கலந்து கொண்டு, மாணவன் சரவணன் சிவாவுக்கு மடிக்கணினியை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கீழப்பாவூர் பேரூர் செயலாளர் ஜெகதீசன், முன்னாள் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் மேகநாதன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் தட்டப்பாறை கணபதி, இளைஞர் அணி அரவிந்த், மாணவரணி தினேஷ் ,தொண்டரணி மோகன், ஒன்றிய கவுன்சிலர் சண்முகராம், தகவல் தொழில்நுட்ப அணி சுந்தர்,சோனா மகேஷ், இயேசு ராஜா, டேனியல், அருணாசலம் ,தொழிலதிபர் மயிலேறி ,அருணா பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பிரதிநிதி நெப்போலியன் நன்றி கூறினார்.
ஏற்கனவே கடந்த ஆண்டு மாணவன் சரவணன் சிவாவுக்கு சுரண்டை அரசு கலைக்கல்லூரியில் பயிலுவதற்கு சிவபத்மநாதன் ஏற்பாடு செய்து கொடுத்தது குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments