தென்காசி நகராட்சி நடுநிலைப்பள்ளி புதிய வகுப்பறை கட்டிடத்தை நகராட்சி தலைவர் சாதிர் திறந்து வைத்தார்


தென்காசியில் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடத்தினை நகராட்சி தலைவர் சாதிர் திறந்து வைத்தார்.

தென்காசி 13வது வார்டு நகராட்சி நடுநிலைப்பள்ளி யில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா நடைபெற்றது.  நகராட்சி தலைவர்சாதிர் தலைமை வகித்து, வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார். இந்நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், வட்டார கல்வி அலுவலர்கள் சண்முகசுந்தர பாண்டியன், இளமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் திருமலை குமார் வரவேற்றார்.

தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) ஜெயப்பிரகாஷ் ராஜன் கலந்து கொண்டு,  சென்னை வேளச்சேரி லயன்ஸ் கிளப்  மூலம் வழங்கப்பட்ட ரூ. 60 ஆயிரம் மதிப்பிலான இருக்கைகளை பள்ளி தலைமை ஆசிரியரிடம், வழங்கினார். முடிவில் வின்சென்ட் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஜபருல்லாகான், மணி மந்திரி ,கௌசல்யா  எப்சிபா ,விமலா, யாஸ்மின்  தமிழ்ச்செல்வி, புன்னகை சுகி, மாலையம்மாள்  ராதா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Post a Comment

0 Comments