அரசு பள்ளி கழிவறையை சுத்தம் செய்த மாணவிகள்..... தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்

 


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பெருங்காடு கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 5ம் வகுப்பு வரை வகுப்புகள் உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக கலைவாணி என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவருடன் 5 ஆசிரியர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்த பள்ளியில் மலைகிராமம் உட்பட பக்கத்து கிராமங்களை சேர்ந்த மாணவிகள் பலரும் படித்து வருகின்றனர். இந்நிலையில் சமூக வலைதளத்தில் தற்போது வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் யூனிபார்ம் அணிந்த 3 மாணவர்கள் காலணிகள் இல்லாமல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் கழிவறைகளை சுத்தம் செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

இந்த வீடியோவில் உள்ள மாணவிகள் பழங்குடியினர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. இதற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதற்கு அந்த மாணவிகளின் பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பள்ளி ஆசிரியைகள் தான் மாணவிகளை இவ்வாறு கழிவறையை சுத்தம் செய்ய வற்புறுத்தி உள்ளனர்.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது பள்ளி நிர்வாகம் இதுதான் தவறு உள்ளது என்பது தெரிய வந்தது. இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியை கலைவாணியை சஸ்பெண்ட் செய்த மாவட்ட கல்வி அலுவலர் தென்றல் உத்தரவிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments