விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே மிக பிரமாண்டமான வகையில், த.வெ.க., மாநாட்டை நடத்தி, நடிகர் விஜய் தனது செல்வாக்கை நிரூபித்துள்ளார். இதில், லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டதைத் தொடர்ந்து, அரசியல் களம் சூடு பிடித்தது. தமிழகத்தில் மாற்று அரசியலை முன் வைத்தவர் விஜயகாந்த். அந்த வெற்றிடத்தை நிரப்பும் வாய்ப்பு, விஜய்க்கு பிரகாசமாக உள்ளது.
விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் களம் இறங்குகிறது. தனித்து போட்டியா அல்லது கூட்டணி அமைத்து களம் காண்பதா என்பதை இன்னும் விஜய் அறிவிக்கவில்லை. அதேநேரம், கட்சி வளர்ச்சி பணிகளில் அவர் தீவிரம் காட்டி வருகிறார். மாவட்ட செயலாளர்களை தேர்வு செய்யும் பணியில் விஜய் மும்முரம் காட்டி வந்தார்.இந்நிலையில், சென்னை பனையூரில் நாளை (ஜன.,10) தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடை பெற உள்ளது. 10 மணிக்கு கூட்டம் நடைபெறும். கூட்டத்தில் அக்கட்சி தலைவர் விஜய் பங்கேற்கிறார். 100 மாவட்ட செயலாளர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். நான்கு மாதங்களாக மாவட்ட செயலாளர் தேர்வு நடைபெற்று வந்த நிலையில் நாளை இறுதிச் செய்யப்படுகிறது.புதிதாக தேர்வு செய்யப்பட்ட உள்ள மாவட்ட செயலாளர்கள் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு நாளை வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. வாக்கெடுப்பு முறையில் 100 மாவட்டச் செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். புதிய மா.செ.,க்களுடன் கூட்டம் முடிந்ததும் விஜய் செய்தியாளர்களைச் சந்திப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
நாளை தொழிற்சங்கம் அமைக்கப்பட உள்ளது. தொழிற்சங்கம் நிர்வாகிகள் தேர்வு செய்யும் பணி நடக்கிறது. மகளிர், மாணவர், இளைஞர் உள்ளிட்ட அணிகளை உருவாக்க அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
0 Comments