நாகை புனித செபஸ்தியார் ஆலய ஆண்டு திருவிழா திருத்தேர் பவனி
நாகை அடுத்த காடம்பாடியில் அமைந்துள்ள புனித செபஸ்தியார் ஆலய ஆண்டு திருவிழா கடந்த 11 ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி ஒவ்வொரு நாளும் நவநாள் திருப்பலி நடைபெற்று ஒன்பதாம் நாளான ஞாயிற்றுக்கிழமை திருத்தேர் பவனி சிறப்பு திருப்பலி நாகை புனித லூர்து அன்னை ஆலயத்தின் பங்குத்தந்தை பேரருள் பன்னீர்செல்வம் மற்றும் உதவி பங்குத்தந்தை மரிய பிரகாசம் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து திருத் தேரில் புனித செபஸ்தியார் சுருபம் வைக்கப்பட்டு தேர் புனிதம் செய்து ஆலயத்தை சுற்றியுள்ள தெருக்களில் திருத்தேரானது வானவேடிக்கையுடன் பவணியாக எடுத்துச் செல்லப்பட்டு மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் ஜி.சக்கரவர்த்தி
செல்: 9788341834
No comments