• Breaking News

    ஒட்டியம்பாக்கம் முதல் நிலை ஊராட்சியில் கிராம சபை கூட்டம்


     புனித தோமையர் மலை ஒன்றியம் ஒட்டியம்பாக்கம் முதல் நிலை ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவி சரண்யா வீரபாபு தலைமையில் நடைபெற்றது.இதில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தங்கள் பகுதியில் உள்ள குறைகளை எடுத்துரைத்தனர்.

      குடிநீர்,கழிவுநீர் தெருக்களில் தேங்குவது போன்ற பிரச்சினைகளை கூறினர்,பின்னர் சரண்யா வீரபாபு சாலை பிரச்சினைகள் மற்றும் அனைத்து குறைகளையும் வெகுவிரைவில் முடித்து கொடுக்கப்படும் என்று கூறினார்.உடன் வீரபாபு,துணை தலைவர் லோகிதாஸ்,வார்டு கவுன்சிலர்கள்,ஊராட்சி ஊழியர்கள்,பொது மக்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் ஓட்டியம்பாக்கம் ஊராட்சி நடுநிலை பள்ளியில் பயிலும் 6ஆம் வகுப்பு  மாணவன் S. சஞ்சய் மாவட்ட அளவிலான சிலம்பம் சுற்றும் போட்டியில் முதல் மாணவனாக வென்றதை பாராட்டி சன்மானம் வழங்கப்பட்டது குறிப்படத்தக்கது.

    No comments