சிறுவனுடன் நடனம் ஆடிய பாமக நிறுவனர் ராமதாஸ்

 


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பகுதியில் கேனரிக் குப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் சரஸ்வதி மற்றும் அறிவியல் கலைக்கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பாமக நிறுவனர் ராமதாஸ் பங்கேற்றார். விழாவில் கலந்து கொண்ட ராமதாஸ் கல்லூரி மாணவ, மாணவிகளுடன் பொங்கல் வைத்து விழாவை சிறப்பித்தார். 

இதன் பின்னர் கோலம் போட்டிகள் மற்றும் பிற போட்டிகளை பார்வையிட சென்ற போது செண்டை மேளம் வாசிக்கப்பட்டது. மேளத்தின் இசைக்கேற்ப சிறுவன் ஒருவர் ஆடிக்கொண்டே பாமக நிறுவனர் ராம தாஸ் அருகில் சென்றார். அதைப் பார்த்து ராமதாஸும் கைகளை அசைத்தபடி சிறுவனுடன் இணைந்து நடனம் ஆடினார்.

கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள், கட்சியினர் கைத்தட்டி மகிழ்ச்சி அடைந்தனர். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பது தமிழனின் மரபாகும். தமிழன் தனக்கு பசி இருந்தாலும் பிறருக்கே உணவளித்து மகிழ்ச்சி அடைவான். அதனைப் போற்றும் வகையில் கொண்டாடப்படுவது தைத்திருநாள் ஆகும். 

தைத்திருநாள் விழாவில் மாணவர்களாகிய உங்களுக்கு மற்றும் உங்கள் பெற்றோர்கள் இவ்வுலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் தமிழர் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள். பொங்கலோ பொங்கல் எனக்கூறி மாணவ, மாணவிகளுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Post a Comment

0 Comments