தமிழகமெங்கும் பொங்கல் விழாவை முன்னிட்டு சமத்துவ பொங்கல் நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டு வருகின்றன இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நெசவாளர் காலனி நகராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவ மாணவிகள் சமத்துவ பொங்கல் கொண்டாடினர்.
கரும்பு மஞ்சள் ஆகியவற்றை வைத்து புது அரிசியில் வெல்லம் இட்டு பொங்கல் வைக்கப்பட்டது. இதனைத் அடுத்து பொங்கல் பானையை பூஜை செய்து மாணவ மாணவிகளுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் பள்ளி ஆசிரியர்கள் திருச்செங்கோடு நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments