அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை..... ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள்

 


வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி காந்தி நகரில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மகனுக்கு சொந்தமான வீடு அமைந்துள்ளது. அமைச்சரும் அவரது மகன் கதிர் ஆனந்த் எம்.பி ஆகியோர் ஆந்திரா எல்லையோரம் இருக்கும் கிறிஸ்டியன் பேட்டையில் கிங்ஸ்டன் இன்ஜினியரிங் கல்லூரி நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை 10க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சரின் வீடு மற்றும் கல்லூரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்று சோதனை நடத்தினர்.

இரண்டு இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக நின்றனர். அது மட்டும் இல்லாமல் அமைச்சருக்கு நெருக்கமான திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் வீட்டிலும் அமலாக்க துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து அறிந்த திமுகவினர் அமைச்சரின் வீடு மற்றும் கல்லூரியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வீடு மற்றும் கல்லூரியில் சில ஆவணங்களை அமலாக்க துறையினர் கைப்பற்றியதாக தெரிகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments