குர்பிரீத் கோகி 2022ம் ஆண்டு ஆம்ஆத்மி கட்சியில் சேர்ந்தார். பின்னர் நடந்த சட்டசபை தேர்தலில், லுாதியானா தொகுதியில் இரண்டு முறை எம்.எல்.ஏ.,வான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாரத் பூஷன் ஆஷூவை தோற்கடித்தார்.இந்த சம்பவம் பற்றி , டி.ஜி.பி., ஜஸ்கரன் சிங் தேஜா கூறும்போது, துப்பாக்கி குண்டு காயங்களுடன் கோகி கிடந்துள்ளார். அவரது உடல் பிரேத பரிசோதனை செய்த பிறகு காரணம் தெரிய வரும் என்றார்.
உரிமம் பெற்ற துப்பாக்கியை சுத்தம் செய்யும் போது, குர்பிரீத் கோகி தற்செயலாக சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், இந்த சம்பவம் நள்ளிரவில் நடந்துள்ளது என்றும் முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. எனினும் போலீசார் பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 Comments