அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டிய அசிங்கம்..... சீமானை ஃப்ரை செய்த ராஜீவ்காந்தி

 


நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து பெரியார் பற்றி அவதூறாக பேசி வருவதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நேற்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தி சீமானை சரமாரியாக விமர்சித்துள்ளார். 

இவர் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தவர். இந்நிலையில் சீமான் பற்றிய ராஜீவ் காந்தி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, சீமான் சமஸ்கிருத திணிப்பை விட ஹிந்தி திணிப்பை விட கொடிய திணிப்பு பெரியார் திணிப்பு என்று கூறி வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.

அவர் எங்களைப் போன்ற இளைஞர்களின் அறிவு பொருளாதாரம் மற்றும் உழைப்பு போன்றவற்றை சுரண்டியதோடு இன்னும் எத்தனையோ இளைஞர்களை இது போன்ற கட்டுக் கதைகளை கூறி நம்ப வைத்து அவர்களையும் சுரண்டி கொண்டிருக்கிறார். சீமான் சொல்லும் ஆண் வேட்டை மற்றும் ஆமை கறி போன்றவைகள் எல்லாம் விடுதலைப்புலிகள் அமைப்பை கொச்சைப்படுத்துவது போல் இருக்கிறது.

 ஒரு போராளியை மாவீரரை அவர் மாஸ்டர் செஃப் போன்று காட்சிப்படுத்துகிறார். அவர் இளைஞர்களின் போராட்ட எழுச்சி மற்றும் தமிழ் மற்றும் தமிழர் உரிமை போன்றவற்றை மட்டம் தட்டுகிறார். இது ஆபத்தான மனித நோய் மட்டும் கிடையாது. மேலும் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டிய அசிங்கம் என்று கூறினார்.

Post a Comment

0 Comments