காற்று மாசுபாடு..... சென்னை வாசிகளுக்கு ஆபத்து....

 


சென்னையில் காற்று மாசுபாடு கடந்த இரு வாரங்களாக மிக மோசமான அளவுக்கு அதிகரித்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி காற்றின் தர குறியீடு 39 இல் இருந்து 142 ஆக அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக நுரையீரல் பாதிப்பு உள்ளவர்கள், ஆஸ்துமா பிரச்சினை உள்ளவர்கள், இதய நோயாளிகள் அதிக அளவில் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. சென்னையில் தீபாவளி பண்டிகையின் போது காற்று மாசுபாடு உயர்ந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. மேலும் இது சென்னை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments