செங்கோட்டை: சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய பயணியர் நிழற்கூடம்
தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா வல்லம் பகுதியில் ரேஷன் கடைக்கு அருகில் உள்ள இந்த நிழற்கூடம் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் மறைந்த முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன் அவர்களால் தொகுதி நிதியில் இருந்து கட்டப்பட்டு முறையாக பராமரிக்கப்பட்டு வந்தது.
அமைச்சரின் மறைவுக்கு பின் இந்த நிழற்குடை மெல்ல மெல்ல மக்கள் பயன்பாட்டில் இருந்து விலகி குடி பிரியர்களின் கூடாரமாக மாறிவிட்டது. தற்சமயம் அந்த அமைச்சரின் மகன் குட்டியப்பா என்ற முரளி கிருஷ்ணா தான் இங்கு எம்எல்ஏவாக இருக்கிறார்.
அவரது வீடு இருக்கும் பகுதிக்கு அருகில் தான் இந்த அவல நிலை உள்ளது. தற்போது பெண்கள் இங்கு நிற்க அச்சப்பட்டு அடுத்த பேருந்து நிறுத்தத்திற்காக அரை கிலோமீட்டர் நடந்து சென்று அவதிப்படுகின்றனர். கல்வெட்டிலும் கால வெட்டிலும் தந்தையின் பெயரில் மாசு படியவிடாமல் விரைவாக எம்எல்ஏ நடவடிக்கை எடுத்தால் நலமாக இருக்கும்.
No comments