கீழப்பாவூர் பேரூர் திமுக பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்.... நிர்வாகிகள் பங்கேற்பு


கீழப்பாவூர் பேரூர் திமுக பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் கீழப்பாவூரில்  நடைபெற்றது.  முன்னாள் பேரூர் செயலாளர் வேலாயுதம் தலைமை வகித்தார். மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பொன்அறிவழகன், மாவட்ட பிரதிநிதி பொன்செல்வன், முன்னாள் துணைத்தலைவர் தங்கச்சாமி முன்னிலை வகித்தனர். பேரூர் செயலாளர் ஜெகதீசன் வரவேற்று பேசினார்.

கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற தலைவர் பி.எம்.எஸ்.ராஜன் கலந்து கொண்டு, பொங்கல் திருவிழா கொடியேற்று நிகழ்ச்சி நடத்துவது குறித்து ஆலோசனைகளை வழங்கி பேசினார். கூட்டத்தில் அவைத்தலைவர் நாராயணசிங்கம், ஒன்றிய பொருளாளர் அன்பரசு, பேரூர் பொருளாளர் தெய்வேந்திரன், துணை செயலாளர் முருகன், ஒன்றிய பிரதிநிதிகள் காளிமுத்து, மலைச்சாமி, கந்தசாமி, கவுன்சிலர் இசக்கிமுத்து, வார்டு செயலாளர்கள் கோபாலகிருஷ்ணன், மாடசாமி, ஸ்ரீதரன், தங்கேஸ்வரன், மதியழகன், மாரியப்பன், சுப்பிரமணியன், பெரியசாமி, சுடர்ராஜ், சுரேஷ், ராஜதுரை, இளைஞரணி பாரதிராஜா, ராஜேஷ், சுந்தர்ராஜ், ரவிச்சந்திரன், மாரிச்செல்வம், செல்வராஜ், தங்கப்பழம், ராமகிருஷ்ணன், கணேசன், முருகேசன், ராமர், ஆறுமுகநயினார், சுடலையாண்டி, பூங்குன்றன், இசக்கி, இசக்கிமுத்து, அர்ச்சுணன், முருகன், கணேசன். உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் தினத்தன்று கீழப்பாவூர் பேரூர் பகுதியில் 30 இடங்களில் கொடியேற்றி, இனிப்புகள் வழங்குவது,:  கீழப்பாவூர் கலைஞர் அறிவாலயம் புதிய கட்டிடம் கட்டுவதற்கு குழு அமைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Post a Comment

0 Comments