• Breaking News

    பட்டப்பகலில் பைனான்சியரை ஓட ஓட விரட்டி கொலை

     


    வேலூர் மாவட்டத்தில் உள்ள சேம்பாக்கம் ராகவேந்திரா கோவில் அருகே படுகாயங்களுடன் ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர் சத்துவாச்சாரி செங்காநத்தம் சாலை மகாவீர் நகர் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார்(39) என்பது தெரியவந்தது.

    இவர் வேலூர் ஆற்காடு உள்ளிட்ட பகுதிகளில் பைனான்ஸ் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. பட்டப்பகலில் செந்தில்குமாரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி கொலை செய்துள்ளது. செந்தில்குமார் ஸ்கூட்டியில் தப்பித்து செல்ல முயன்றார். ஆனாலும் அந்த கும்பல் அவரை விடாமல் விரட்டி வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இந்த வழக்கின் குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    No comments