வேங்கைவயலில் பேனர் வைத்தது எதிர்க்கட்சியா...? போலீசார் தீவிர விசாரணை
புதுக்கோட்டை அருகே வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில், இரண்டு ஆண்டுக்கு முன்பு மலம் கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த சம்பவம் நடந்து, இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.
வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வரும் நிலையில், குற்றவாளிகளை அடையாளம் காண அறிவியல் ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதனிடையே, வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் இருப்பதை கண்டிக்கும் வகையில் தயார் செய்யப்பட்ட ஒரு பிளக்ஸ் பேனரின் போட்டோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.இது தொடர்பாக போலீசார் கூறியதாவது: வேங்கைவயல் சம்பவம் நடந்து, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அதை உணர்த்தும் வகையில், கடந்த மாதம் 26ல், வேங்கைவயல் கிராமத்தில் வைக்க சிலர் ஏற்பாடு செய்துள்ளனர். அதற்காக, தயார் செய்யப்பட்ட பேனர் குறித்து தகவல் கிடைத்ததும், போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதனால், பேனர் வைக்கப்படவில்லை. இருந்தபோதும், அந்த பேனரை வீடியோ பதிவெடுத்து, சமூக வலைதளங்களில் பரப்பி விட்டுள்ளனர். லோக்கலில் விசாரித்த வரையில், எதிர்க்கட்சியினர் துாண்டுதலில் தான் யாரோ இதை செய்திருக்க வேண்டும். தீவிர விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments