கொடைக்கானலில் குதிரை தாளி கிழங்கினை கேரள இளைஞர்கள் மூக்கில் வைத்து முகரும் வீடியோ இன்ஸ்டாவில் வைரல்..... மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் விழிப்புணர்வு

 


திண்டுக்கல் கொடைக்கானல் மேல்மலை, கவுஞ்சி கிராமத்தில் ராஜ் என்பவர் குதிரைதாளி என்ற கிழங்கினை நசுக்கி மூக்கில் வைத்து நுகர்வதால் உடல் புத்துணர்ச்சி பெறுவதாக இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்த நிலையில் அந்த வீடியோ வைரலானது.

இதனால் கேரளாவை சேர்ந்த இளைஞர்கள் கவுஞ்சி கிராமத்திற்கு படையெடுக்க தொடங்கினர். ரூ.600 செலுத்தி குதிரை தாளி கிழங்கினை மூக்கில் வைத்து நுகர்ந்து தலை சுற்றுவது போன்று இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்யப்பட்டது இந்த வீடியோக்கள் வைரலானதால்.

திண்டுக்கல் மதுவிலக்கு அமலாக்க பிரிவு டிஎஸ்பி.முருகன் தலைமையிலான போலீசார் இது குறித்து கொடைக்கானல் மேல்மலை கிராமமான கவுஞ்சியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Post a Comment

0 Comments