நெல்லையில் இருந்து அயோத்திக்கு சிறப்பு ரெயில்

 


தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்திய ரெயில்வேயின் சுற்றுலா பிரிவான ஐ.ஆர்.சி.டி.சி. சார்பில் சுற்றுலாப் பயணிகளுக்காக பிரத்யேக பாரத் கவுரவ் சுற்றுலா ரெயில் இயக்கப்பட உள்ளது. இது மகா கும்பம் - 2025 என்ற பெயரில் இயக்கப்படுகிறது.

இந்த சிறப்பு சுற்றுலா ரெயில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி நெல்லையில் இருந்து நள்ளிரவு 1 மணிக்கு புறப்பட்டு தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர் வழியாக விஜயவாடா வழியாக 7-ந்தேதி மதியம் 12.30 மணிக்கு பனாரஸ் சென்றடைகிறது. இதையடுத்து 8,9,10-ந்தேதிகளில் வாரணாசி, பிரயாக்ராஜ், அயோத்தி ஆகிய இடங்களுக்கு செல்கின்றது.

இதை தொடர்ந்து 10-ந்தேதி ஆயோத்தியில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு 13-ந்தேதி நெல்லை வந்தடைகிறது. இதில் ஒரு 2-ம் வகுப்பு குளிர்சாதன பெட்டி, மூன்று 3-ம் வகுப்பு குளிர்சாதன பெட்டிகள், 7 படுக்கை வசதி பெட்டிகள், 1 பேட்டரி கார், 2 பவர் கார்கள் என் மொத்தம் 14 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. மேலும் www.irctctourism.com என்ற இணையதள முகவரி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments