தென்காசி மாவட்டத்தில் நாளை கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தகவல்
தென்காசி மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஜன.26 ந்தேதி கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினமான ஜன.26ந்தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல்,மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் 2025-26 ஆம் நிதியாண்டிற்கான கிராம வளர்ச்சி திட்டத்திற்கு ஒப்புதல் பெறுதல் மற்றும் இதர பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
கிராம ஊராட்சிகளில் நடைபெறும் இக்கிராம சபை கூட்டத்தினை கண்காணிக்க மாவட்ட அளவிலான உதவி இயக்குநர் நிலை அலுவலர்கள் மற்றும் வருவாய் வட்டாட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இக்கிராம சபை கூட்டங்களில் கிராம ஊராட்சிகளின் அனைத்து பொதுமக்களும் கலந்துகொள்ளலாம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
No comments