• Breaking News

    பாவூர்சத்திரம் செல்வவிநாயகர்புரம் பகுதி நேர ரேசன் கடையை முழு நேர கடையாக மாற்றிட வேண்டும் - உணவுத்துறை அமைச்சரிடம் முன்னாள் மாவட்ட செயலாளர் கோரிக்கை

     


    பாவூர்சத்திரம் செல்வவிநாயகர்புரத்தில் உள்ள பகுதி நேர ரேசன் கடையை முழு நேர கடையாக மாற்றிட வேண்டும் என உணவுத்துறை அமைச்சரிடம், முன்னாள் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இது குறித்து முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியை நேற்று (வியாழன்) நேரில் சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், கல்லூரணி ஊராட்சி, பாவூர்சத்திரம் செல்வ விநாயகர்புரத்தில் பகுதிநேர கடை இயங்கி வருகிறது.  இங்கு 638 ரேஷன் கார்டு அட்டைதாரர்களும், தாய் கடையான கல்லூரணியில் 590 ரேஷன் அட்டைதாரர்களும் பொருட்கள் வாங்கி வருகின்றனர்.  ஒரு கடையை முழு நேர கடையாக பிரிக்கப்பட வேண்டும் என்றால் குறைந்தது 500 குடும்ப அட்டைகளும், தாய் கடையில் 500 குடும்ப அட்டைகளுக்கும் குறைவில்லாமல் இருக்க வேண்டும் என்கிற அரசாணை உள்ளது.

    எனவே இதன் அடிப்படையில் செல்வவிநாயகர்புரம் பகுதி நேர ரேசன் கடையை முழு நேர கடையாக மாற்றினால் ரேசன் அட்டைதாரர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். மேலும் முழு நேர கடை இயங்கும் வகையில் இதற்கான கட்டிடம் ஏற்கனவே கல்லூரணி ஊராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் செல்வ விநாயகர்புரத்தில் கட்டப்பட்ட உள்ளது. எனவே  செல்வ விநாயகர் புரத்தில் இயங்கி வருகிற பகுதிநேர நியாய விலை கடையை முழுநேர நியாய விலை கடையாக அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    அப்போது, பொதுக்குழு உறுப்பினர் சாமிதுரை, கீழப்பாவூர் பேரூர் திமுக செயலாளர் ஜெகதீசன், மாவட்ட பிரதிநிதி ஸ்டீபன் சத்யராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    No comments