பழனியில் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டிலுக்கு தடை


திண்டுக்கல் மாவட்டம் பழனி, சார்ஆட்சியர் அலுவலகத்தில் சார்ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனி நகர் முழுவதும் 500ML தண்ணீர் பாட்டில், ரூ.10 குளிர்பான பாட்டில் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் நெகிழி இல்லா பழனி மாநகரை உருவாக்க வேண்டும் என்று சார் ஆட்சியர் வேண்டுகோள் விடுத்தார்.இந்நிகழ்வில் பழனி நகர வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments