ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த வருடம் உடல்நல குறைவினால் உயிரிழந்து விட்டதால் தற்போது அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தொடர்ந்து பிப்ரவரி 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும். இந்த இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடுவதாக அறிவித்துவிட்ட நிலையில் திமுக சார்பில் வீசி சந்திரசேகர் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இந்நிலையில் இன்று அதிமுக கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தின் போது ஈரோட்டுக்கு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக முடிவு செய்யப்படும். நேற்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில் கடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாததால் இந்த முறை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் இது தொடர்பாக இன்று அறிவிப்பு வெளியாக உள்ளது.
0 Comments