டெல்லியில் சட்டசபை தேர்தல் வேட்புமனு தாக்கல் நடைபெறுகிறது. இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் முன்னாள் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தனது வேட்பமனு தாக்கல் செய்தார். அப்போது வேட்புமனுதாக்களோடு தனது சொத்துக்கள் குறித்த விவரங்கள் அடங்கிய ஆவணத்தையும் தாக்கல் செய்தார்.
அந்த ஆவணத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலின் சொத்து மதிப்பாக கையில் ரூபாய் 50,000 ரொக்க பணம் உள்ளதாகவும், வங்கி கணக்கில் ரூபாய் 2.96 லட்சம் சேமிப்பு பணமாகவும், அசையா சொத்துக்களின் மதிப்பு ரூபாய் 1.70 கோடி ஆகும் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் தனக்கு சொந்தமான வீடு காரோ இல்லை எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அவருடைய மனைவியின் பெயரில் ரூபாய் இரண்டு புள்ளி 50 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் மனைவி சுனிதாவின் தங்கம் வெள்ளி நகைகள் மற்றும் குருகுராமில் ஒரு வீடு மற்றும் ஒரு சிறிய கார் ஆகியன அடங்கும்.
0 Comments