மாநிலத்தை மாவட்டமாக மாற்றி பேசிய அமைச்சர் சா.மு. நாசர்..... மாணவர்கள் நகைப்பு, கிண்டல்


மாநிலம் எது? மாவட்டம் எது? என்று கூட தெரிந்து கொள்ளாமல்   பேசிய அமைச்சர் சா.மு. நாசரை பார்த்து மாணவர்கள், மாணவிகள் கிண்டலடித்து சிரிப்பொலி எழுப்பினர்.

 இது கூட தெரியாமல் இவர் எப்படி அமைச்சராக இருக்கிறார் என்ற கேள்வியை அரசு அதிகாரிகள், செய்தியாளர்கள் கேலியும் கிண்டலும் செய்தது குறிப்பிடத்தக்கது.திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அரங்கில்  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மிதிவண்டி போட்டி நடைபெற்றது.

போட்டியை கொடி அசைத்து தொடங்கி வைத்து சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு. நாசர் பேசும் போது, 

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கு போர் நடைபெற்ற வரும் நிலையில், செஸ் ஒலிம்பியா போட்டி இந்தியாவில் நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

 அப்போது இந்தியாவில் பீஸ் ஃபுல்லான மாவட்டம் தமிழ்நாடு என  பேசியதும் அங்கு கூடியிருந்த மாணவ மாணவிகளின் பெற்றோர், போட்டியில் பங்கேற்ற மாணவ மாணவிகள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள், ஏன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் த. பிரபு சங்கர், எம் பி, சசிகாந்த் செந்தில், ஆகியோர் திடீரென சிரித்துவிட்டனர்.இதைக் கூட அவர் கவனிக்காமல் தொடர்ந்து பேசியது தான் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொதுவாக மேடையில் அமைச்சர்கள் பேசும்போது வார்த்தைகள் தவறாக பேசிவிட்டால் மன்னிக்கவும் என்று கூறி அதை திருத்தி தொடர்ந்து பேசுவது தான் வழக்கம்.ஆனால், அமைச்சர் பொறுப்பில் இருக்கும் இவர் கொஞ்சம் கூட அசிங்கப்படாமல்  தொடர்ந்து பேசியது வேடிக்கையே.

பேசத் தெரியாமல் பேசும் இது போன்ற அமைச்சர்களுக்கு திமுக விடியல் அரசு பயிற்சி அளிக்க வேண்டும் என திமுகவினரே பேசிக்கொண்டனர்.இவர் இதற்கு முன்பு அமைச்சராக இருந்தபோது கோபத்தின் உச்சியில் நாற்காலியை தூக்கி வீசிய சம்பவத்தில் அமைச்சர் பதவியை இழந்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.

திருவள்ளூரில் நடைபெற்ற சைக்கிள் போட்டி மற்றும் மாரத்தான் போட்டிகளில் திருவள்ளூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி. ஜி .ராஜேந்திரன் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார்.

அவரது தொகுதியில் நடைபெற்ற இரு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொள்ளாததால் அமைச்சர் சா.மு. நாசருக்கும், எம்.எல்.ஏ. வி.ஜி. ராஜேந்திரனுக்கும்  இடையே திமுக அரசியலில் உள்கட்சியில் உள்ளூர கருத்து வேறுபாடு மோதல்கள் பலநாட்கள் இருப்பதாக   திமுக நிர்வாகிகளே பேசிக் கொள்கின்றனர்.


Post a Comment

0 Comments