அய்யன் திருவள்ளுவர் திருவருவச் சிலை அமைக்கப்பட்ட வெள்ளிவிழாவை முன்னிட்டு தென்காசி மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் அச்சன்புதூர் அரசு தொடக்கப்பள்ளி மாணவர் மு.வருண் கிருஷ்ணா மாவட்ட அளவில் இரண்டாம் பரிசு பெற்றார்.
தென்காசி மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற விழாவில் மரியாதைக்குரிய மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் சான்றிதழ் மற்றும் 3000 பரிசுத்தொகை வழங்கி சிறப்புரையாற்றினார்.விழாவில் மாவட்ட நூலக அலுவலர்கள் மற்றும் மதிப்புக்குரிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மாவட்ட அளவில் வெற்றி பெற்ற அச்சன்புதூர் அரசு தொடக்கப்பள்ளி மாணவரைப் பாராட்டி பள்ளியின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் திருமதி மாரிச்செல்வி முன்னாள் தலைவர் திரு சதீஷ் மற்றும் தலைமையாசிரியர் ஜோசப் மிக்கேல் அந்தோணி மற்றும் ஆசிரியர்கள் மாணவியரைப் பாராட்டிப் பேசினர்.
0 Comments