நாகை மாவட்டம் திருக்குவளை கே.கே நகர் பகுதியைச் சேர்ந்தவர் வீரக்குமார் (வயது 54) விவசாயி இவர் கடந்த டிசம்பர் மாதம் பூச்சி மருந்து (விஷம்) அருந்தி மயங்கி விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு நாகை அருகே ஒரத்தூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்தார்.இது குறித்து திருக்குவளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு வீரக்குமார் மது அருந்திவிட்டு மோட்டார் சைக்கிள் ஓட்டி சென்றதாக கூறி திருக்குவளை போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில் திருகுவளை போலீசார் வீரக்குமாரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக கூறி மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதனால்தான் அவர் விஷம் அருந்தி தற்கொலைக்கு தூண்டியதாக கூறி வீரக்குமாரின் உறவினர்கள் மற்றும் ஊர்கிரர்கள் உடலை திருக்குவளை-மேலப்பிடாகை சாலையில் வைத்து சம்பந்தபட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த நாகை கூடுதல் போலீஸ் காவல் கண்காணிப்பாளர் முத்துவேல்பாண்டி, துணை போலீஸ் சூப்பிரண்ட் ராமச்சந்திர மூர்த்தி,கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், திருக்குவளை துணை தாசில்தார் ஏழிலரசி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட போலீசார் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.இதனால் திருக்குவளை -மேலப்பிடாகை சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்ப்பட்டது. சாலையில் இறந்தவர் உடலை வைத்து போராட்டம் நடத்த்தியது அந்தபகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மக்கள் நேரம் எடிட்டர்
நாகை மாவட்ட நிருபர்
ஜி.சக்கரவர்த்தி
விளம்பர தொடர்புக்கு :
செல்: 9788341834
0 Comments