ஆம்ஸ்ட்ராங் படுகொலை..... பிரபல ரவுடி பாம் சரவணனை துப்பாக்கியால் சுட்டு பிடித்த காவல்துறை

 


சென்னையில் கடந்த வருடம் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் குற்றவாளிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகிறார்கள். கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்டோர் சிக்கிய நிலையில் தற்போது ஆம்ஸ்ட்ராங் தீவிர ஆதரவாளராக செயல்பட்டு வந்த பிரபல ரவுடி பாம் சரவணன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு தலைமறைவாகிவிட்டார்.

இவர் மீது 6 கொலை வழக்குகள் உட்பட 33 வழக்குகள் நிலவையில் இருக்கிறது. இவர் மீது இரு போலீஸ் ஸ்டேஷன்களில் பிடிவாரண்ட்  நிலுவையில் இருக்கும் நிலையில் காவல்துறையினர் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் சரவணன் ஆந்திராவில் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்த நிலையில் அங்கு தனிப்படை போலீசார் விரைந்தனர். அப்போது அவர் தப்பிவிடுவார் என்பதால் அவருடைய காலில் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனர். மேலும் இதில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments