கடந்த 16ஆம் தேதிஅலங்கா நல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டில் 956 காளைகள் கலந்து கொண்ட ஜல்லிகட்டு போட்டியில் 9 சுற்றுகளில் ஒரு முறை கூட பிடிபடாமல் முதல் பரிசை தட்டிச் சென்ற சேலம் அயோத்தியா பட்டணம் வ உ சி பூ மார்க்கெட் மோகன்என்பவர் வளர்த்த வீரப்பன் என்கிற பாகுபலி காளைக்கு எலச்சிபாளையம் ஒன்றியம் மரப்பரை ஊராட்சி தென்னை மரத்து பாளையத்தில் உள்ள மோகனின் குலதெய்வ கோயிலான அண்ணமார் சாமி கோவிலில் தை அமாவாசையை ஒட்டி குவிந்த கிராம மக்கள் பரிசுகள் வழங்கிபாராட்டு தெரிவித்தனர் பின்னர் போட்டி போட்டுக் கொண்டு ஆர்வத்துடன் பாகுபலி காளையுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
தென் தமிழகத்தை சேர்ந்த காளைகளே ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெற்று வந்த நிலையில் வட தமிழகத்தை சேர்ந்த பாகுபலி முதல் பரிசு பெற்றிருப்பதை கொண்டாடும் வகையில் தர்மபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி,ஆத்தூர்,திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பாகுபலிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் ஒன்றியம், மரப்பரை ஊராட்சி தென்னை மரத்து பாளையத்தில் உள்ள அண்ணமார் சாமி கோவிலுக்கு பாகுபலி அழைத்து வரப்பட்டு அண்ணமார் சாமி கோவிலில் பூஜை செய்து மரியாதை செய்யப்பட்டது. இது குறித்து காளையை வளர்த்த மோகன்செய்தியாளர்களிடம் கூறியதாவது தென் தமிழகத்து காளைகள் மட்டுமே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இதுவரை வெற்றி பெற்று வந்த நிலையில் முதல் முறையாக வட தமிழகத்தில் சேலம் அயோத்தியா பட்டணத்தை சேர்ந்த வீரப்பன் என்கிற பாகுபலி காலை 9 சுற்றுகளிலும் யாரிடமும் பிடிபடாமல் முதல் பரிசை பெற்றது.
முதல் பரிசாக டிராக்டர்,மற்றும் பசுவும் கன்று சைக்கிள் தங்கக் காசு, மெத்தை, குக்கர், மிக்சி, டிபன் பாக்ஸ் என பல பரிசுகளை பெற்றது. இந்தக் காளையை வட தமிழக மாவட்டங்களான சேலம் நாமக்கல் கள்ளக்குறிச்சி ஆத்தூர் தேனி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பாராட்டி வாழ்த்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக த திருச்செங்கோடுதாலுக்கா எலச்சிபாளையம் ஒன்றியம் மரப்பரை ஊராட்சி தென்ன மரத்து பாளையத்தில் உள்ள எனது குலதெய்வ கோவிலான அண்ணமார் சாமி கோவிலில் தை அமாவாசையை ஒட்டி நடைபெற்ற சிறப்பு பூஜைக்கு பாகுபலி என்கிற வீரப்பன் வரவழைக்கப்பட்டு பாராட்டு தெரிவித்து சிறப்பு செய்யப்பட்டது.தங்க நாணயம் குத்து விளக்குகள் ஆகியவற்றை பரிசாக வழங்கினார்கள். வட தமிழகத்தில் பகுதியிலிருந்து வரலாற்றில் இல்லாத வகையில் முதல் முறையாக வெற்றி பெற்ற பாகுபலி நினைவாக ரவுண்டானா பகுதியில் ஈரோட்டில் உள்ளது போல் காளை மாட்டு சிலை வைத்து தமிழக அரசு கௌரவப் படுத்த வேண்டும்.மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அலங்காநல்லூர் பாலமேடு போன்ற பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடப்பதை போல் 2000 காளைகளுக்கு மேல் உள்ள சேலம் மாவட்டத்திலும் ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் அல்லது ஸ்டேடியம் ஒன்று அமைத்து தர வேண்டும் என தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைக்கிறோம் எனக் கூறினார்.
பேட்டியின் போதுஅண்ணமார் சாமி கோவில் தர்மகர்த்தா சுப்பையா உள்ளிட்ட கோவில் நிர்வாகிகள் மோகனின் உறவினர்கள் என பலரும் இருந்தனர் காலையை பாராட்டி வாழ்த்திய இளைஞர்கள் காலை உடன் செல்பி எடுத்துக் கொள்வதிலும் போட்டோ எடுத்துக் கொள்வதிலும் ஆர்வம் காட்டினர்.
செய்தியாளர் ஜெ.ஜெயக்குமார்
0 Comments