இங்கு பார் அமைத்தால் நானே தீ வைத்து கொளுத்தி விடுவேன்..... பெண் எம்எல்ஏ எச்சரிக்கை

 


குமரி மாவட்டத்திலுள்ள அருமனை அருகே சிறக்கரை என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்திலுள்ள ஒரு கட்டிடத்தில் தனியார் மது கூடம் அமைய உள்ளதாக தகவல்கள் பரவிய நிலையில் அதனை கண்டித்து கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

 இந்நிலையில் அந்த கட்டிடத்தில் பார் அமைக்கும் பணியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்து சிறக்கரை கிராமத்தை சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுவர்கள் அங்கு திரண்டு கட்டிடத்தில் எதிரே பந்தல் அமைத்து அமர்ந்து பார் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தகவலறிந்த வருவாய் ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் வந்து கட்டிடத்தில் வேலை செய்தவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் பார் அமைக்கவில்லை எனவும், ஹோட்டலுக்கான பணிகள் நடந்து வருவதாகவும் கூறினர்.

ஆனால் பொதுமக்கள் பார் அமைப்பதற்காகவே வேலை செய்து வருவதாக கூறினர். மேலும் கட்டிடத்தில் மேல் பகுதியில் பார் தொடர்பான பலகை உள்ளதாகவும் அதனை அகற்ற வேண்டும் எனவும் பொதுமக்கள் கூறினர். பின்னர் காங்கிரஸ் எம்.எல்.ஏ மற்றும் பேரூராட்சி தலைவி ஆகியோர் வந்து விசாரணை நடத்தினர் அப்போது தனியார் பார் அமைப்பதற்கான பணிகள் நடந்தது உறுதி செய்யப்பட்டது. 

பின்னர் சீட்டுகளை அகற்றுமாறு உரிமையாளரிடம் கூறிய போது பணியாளர்கள் இல்லை முடியாது என கூறியுள்ளார். இதனால் அங்கு கூடியிருந்த மக்களையும் ஆஸ்பெட்டாஸ் சீட்டுகளை அகற்றினர். அப்போது இங்கு பார் அமைத்தால் நானே தீ வைத்து கொளுத்தி விட்டு இங்கு அமர்ந்து போராடுவேன் என்று எம்.எல்.ஏ கூறினார். அதன் பின் போராட்டம் கைவிடப்பட்டது.

Post a Comment

0 Comments