அண்டார்ட்டிகா கண்டத்தில் சிகரத்தில் ஏறி சாதனை சென்னை திரும்பிய பெண் முத்தமிழ்செல்விக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு


விருதுநகர் ஜோகில்பட்டியை சேர்ந்த மலையேற்ற சாதனை பெண் சென்னை மண்ணிவாக்கத்தில் வசிக்கும்   முத்தமிழ்செல்வி(34) இது வரை 5 உயரமான சிகரங்களில் ஏறி சாதனை செய்து இருந்தார். 6வது சாதனை பயணமாக அண்டார்டிக்காவில் உள்ள மவுண்ட் வில்சன் மலையில் 4892 மீட்டர் உயர சிகரத்த்தில் 58 கிலோ எடை கொண்ட பொருட்களுடன் ஏறி சாதனை புரிந்துள்ளர். 

மலையேற்ற சாதனை பெண்ணுக்கு செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், மாவட்ட குழு தலைவர் படப்பை மனோகர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட முத்தமிழ் செல்விக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்து சால்வைகளை போர்த்தியும், மலர்கொத்துகளை கொடுத்து சாதனை பெண்ணை வரவேற்றனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முத்தமிழ்செல்வி:- உலகின் ஏழு கண்டங்களில் உள்ள உயரமான சிகங்களை அடைந்து சாதனை புரிய திட்டமிட்ட நிலையில் தற்போது 6வது சிகரத்தை அடைந்துள்ளேன்.மிகவும் கடுமையான மைனஸ் 50 டிகிரி குளிர் கடும் காற்று, வானிலை சீராக இல்லாததால் மிகுந்த சிரம்மப்பட்டோம்.  விமானத்திற்காக 8 நாள் காத்திருந்ததோம். கால நிலை மாற்ற விழிப்புணர்வுக்காக அண்டார்ட்டிகா சென்றேன். 

இதற்காக முதலமைச்சர் உதவி செய்தார். நிதி உதவி வழங்கினார்கள் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.7வது சிகரம் வட அமெரிக்காவில் உள்ளது. மே மாதம் தான் செல்ல முடியும். இதை செய்த்தால் ஏழு கண்டங்களை ஏறி சாதனையை முழுமை செய்து விடுவேன். மலை உச்சியை தொட்டால் தான் சான்று பெற முடியும்.வாழ்க்கையில் முய்ற்சி செய்து வெற்றி பெற்றால் தான் மகிழ்ச்சியாக இருக்கும். குறுக்கு வழியில் வெற்றி பெற கூடாது என்றார்.

Post a Comment

0 Comments