விழுப்புரம் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு நடைபெற்ற போது அதில் மாநில செயலாளருக்கு பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். இவர் திமுக கூட்டணியில் இருக்கும் நிலையில் திமுக அரசுக்கு எதிராகவே பல கேள்விகளை கேட்டார். அதாவது ஊர்வலம், ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டம் என்று காவல்துறை வழக்கு போடுகிறது. நான் முதல்வர் ஸ்டாலினிடம் ஒன்று கேட்கிறேன்.
தமிழ்நாட்டில் என்ன அறிவிக்கப்படாத அவசர நிலையை பிரகடனப்படுத்தினீர்கள். காவல்துறை கட்டுப்பாடு இல்லாமல் செயல்படும் நிலையில் போராட்டத்தை கண்டு நீங்கள் அஞ்சுவது ஏன்.? ஒரு ஆர்ப்பாட்டம் நடக்கும்போது அனுமதியை ரத்து செய்துவிட்டு கைது செய்தால் முடக்கிட முடியுமா. சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணத்தை நிறுத்த முடியுமா.? காவல்துறை இந்த போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
அவருடைய இந்த பேச்சுக்கு தற்போது திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி கண்டனம் தெரிவித்துள்ளது. இது பற்றிய செய்தியில் இது தோழமைக்கான இலக்கணம் அல்ல. திமுக ஆட்சிக்கு எதிரான சதி கூட்டத்துக்கு கே. பாலகிருஷ்ணன் தீனி போட தொடங்கியுள்ளார். போராட்டங்கள் நடத்திய பிறகு அனுமதி தரவில்லை என்று கூறுவது அறம் கிடையாது. அவசர நிலை என்றால் என்ன என்றே தெரியாத நிலையில் பாலகிருஷ்ணன் இருக்கிறார். பின் விளைவுகள் பற்றி கவலைப்படாமல் பேசுவது தோழமைக்கான இலக்கணம் அல்ல.
குழப்பம் ஏற்படுத்துபவர்களுக்கு நீங்கள் வக்கீலாக மாற வேண்டிய அவசியம் என்ன. பாலகிருஷ்ணன் கடந்த ஆறு நாட்களுக்கு முன்பாக வெளியிட்ட அறிக்கையை படித்து பார்க்க வேண்டும். முதல்வரை எப்போதும் தொடர்பு கொள்ளும் நிலையில் பாலகிருஷ்ணன் இருந்து கொண்டு வீதியில் நின்று எதற்காக இப்படி பேச வேண்டும். முதல்வரை எப்போதும் சீண்டி பார்க்க வேண்டும் என்ற நெருக்கடி கூட இருக்கலாம். மேலும் விழுப்புரம் மாநாட்டில் வெளிச்ச விதைகளை விதைக்கவில்லை எனவும் பல்லாண்டு உணர்ந்த தோழர் இப்படி பேசுவது வருத்தம் அளிக்கிறது என்றும் பதிவிட்டுள்ளனர்.
0 Comments