கும்மிடிப்பூண்டி,பாமகவின் பசுமை தாயகத்தின் தலைவர் செளமியா அன்புமணி அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்டதை கண்டித்து கும்மிடிப்பூண்டியில் பாமகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டனர்.
பாமகவின் பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் செளமியா அன்புமணி சென்னையில் கைது செய்யப்பட்டதை கண்டித்து கும்மிடிப்பூண்டியில் பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் குவிந்தனர். கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தின் முன்புறம் மற்றும் பின்புறத்தில் இருந்து இரு பிரிவுகளாக ஆர்ப்பாட்டம் நடத்த வந்த பாமகவினரை போலீஸார் தடுத்தனர்.
அப்போது பாமவினர் தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷம் எழுபபியதால் போலீஸார் அவர்களை கைது செய்து வாகனத்தில் ஏற்றி தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பாமக முன்னாள் மாவட்ட செயலாளர் க.ஏ.ரமேஷ் தலைமை தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாமக வன்னியர் சங்க நிர்வாகி கேசவன், பாமக நிர்வாகிகள் எஸ்.டி.கே.சங்கர், சுமோ சங்கர், கார்த்தி, விஜயன், சுதா, குமுதா, மகேஷ், சங்கர், பி.ஜி.ரவி, ரவி, நாகராஜ், பிரகாஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்று போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் காரணமாக கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ஜெயஸ்ரீ , இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
0 Comments