கும்மிடிப்பூண்டி கே.எல்.கே அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆசிரியரான பிரேமா மற்றும் உடற்கல்வி இயக்குனரான ரகுபதி ஆகியோரின் பணி நிறைவு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி கே.எல்.கே.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 17ஆண்டு காலம் பணி புரிந்த ஆசிரியை அ.பிரேமா மற்றும் 20ஆண்டுகள் பணிபுரிந்த ஆசிரியர் மு.ரகுபதியின் பணி ஓய்வு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இதில் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் இரா.அறிவழகன், எஸ்.ரமேஷ், க.ரமேஷ், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி துணை தலைவர் கேசவன், டி.ஜெ.எஸ்.கல்வி குழும இயக்குனர் டி.ஜெ.எஸ்.தமிழரசன், தொழிலதிபர் கிளமெண்ட், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் எஸ்.சேகர் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர் .
மேலும் பேரூராட்சி கவுன்சிலர்கள் அப்துல்கரீம், விமலா அர்ச்சுனன், ஒன்றிய கவுன்சிலர் ரவிக்குமார், பள்ளி தலைமை ஆசிரியர் ஜி.மணி , திமுக நிர்வாகி பரத்குமார், டி.கே.ராஜா, மனோகரன், பங்கேற்று பணி ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து பள்ளியின் சார்பில் ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சால்வை அணிவிக்கப்பட்டு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
0 Comments