தாம்பரம் மாநகர பம்மல் வடக்கு மற்றும் பம்மல் தெற்கு பகுதி தி.மு.க. சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது
காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் தாம்பரம் மாநகரம் பம்மல் வடக்கு பம்மல் தெற்கு பகுதி தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் பம்மல் எஸ்.எஸ்.மஹால் திருமண மண்டபத்தில் தாம்பரம் மாநகராட்சி 1வது மண்டலம் குழுத் தலைவர் பம்மல் தெற்கு பகுதி கழக செயலாளர் பம்மல் வே.கருணாநிதி அவர்கள் தலைமையில் பம்மல் வடக்கு பகுதி கழக செயலாளர் திருநீர்மலை த.ஜெயகுமார் அவர்கள் வரவேற்புரையில் பகுதி கழக நிர்வாகிகள் முன்னிலையில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவங்கள் துறை அமைச்சர் காஞ்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் தா.மோ.அன்பரசன், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் காஞ்சி வடக்கு மாவட்ட கழக துணை செயலாளர் இ.கருணாநிதி, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் மாநகர கழக செயலாளர் எஸ்.ஆர்.ராஜா அவர்களும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
இக்கூட்டத்தில் தாம்பரம் மாநகராட்சி மேயர் தாம்பரம் மாநகர கழக துணை செயலாளர் க.வசந்தகுமாரி, தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் தாம்பரம் மாநகர கழக அவைத் தலைவர் கோ.காமராஜ், பல்லாவரம் தொகுதி பார்வையாளர் திருமதி.ரத்னா லோகேஸ்வரன், தாம்பரம் மாநகராட்சி பொது சுகாதார குழுத் தலைவர் தாம்பரம் மாநகர துணை செயலாளர் இரா.நரேஷ்கண்ணா, காஞ்சி வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எல்.பிரபு, காஞ்சி வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் வி.ரவிச்சந்திரன், தாம்பரம் மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் பிகேஏ.சத்தியபிரபு, வட்ட கழக செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாவட்ட மாநகர அணிகளின் துணை அமைப்பாளர்கள், பகுதி கழக அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள், வட்ட கழக நிர்வாகிகள், வாக்குச்சாவடி நிலை முகவர்கள் மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இறுதியில் அனகை மாணவரணி அமைப்பாளர் ஏ.செந்தில்குமார், பம்மல் மாணவரணி அமைப்பாளர் எஸ்.வெங்கடேசன் மற்றும் திருநீர்மலை இளைஞரணி அமைப்பாளர் எம்.சுரேஷ் குமார் ஆகியோர் நன்றியுரையாற்றினார்.
No comments