• Breaking News

    கடும் பனிமூட்டம் காரணமாக சென்னையில் ரெயில்களின் சேவை பாதிப்பு

     


    தமிழக பகுதிகளில் இருந்து வடகிழக்கு பருவமழை விலகியதன் எதிரொலியாக, சென்னையில் பனிமூட்டம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இதற்கிடையே, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. குறிப்பாக, சென்னையின் மைய பகுதிகளான எழும்பூர், பிராட்வே, கிண்டி, நுங்கம்பாக்கம் பகுதிகளில் அதிகாலை முதலே கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது.

    அதேபோல அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் காமராஜர் சாலைகளில் பனிப்பொழிவு காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி செல்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்

    இந்த நிலையில், கடும் பனிமூட்டம் காரணமாக சென்னையில் ரெயில்களின் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது கோவையில் இருந்து சென்னை வரக்கூடிய சேரன் எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் நெல்லை, முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பனிமூட்டம் காரணமாக 20 நிமிடங்கள் தாமதமாக எழும்பூர் வந்தன. அதேபோல, மின்சார ரெயில்களும் தாமதமாக இயக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    No comments