சென்னை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் கழக இளைஞர் அணி செயலாளர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உதய நாள் விழாவை முன்னிட்டு மேடவாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நவம்பர் 27 முதல் டிசம்பர் 27 வரை மாதம் முழுவதும் பிறந்த 47 குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவித்தல் மற்றும் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்குதல் நிகழ்ச்சியினை மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் J.E. பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் .அரவிந்த ரமேஷ் புனித தோமையார் மலை ஒன்றிய கழகச் செயலாளர் ஜி. வெங்கடேசன் மற்றும் கழக நிர்வாகிகள், செயலாளர்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
0 Comments