தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் சுந்தர் சி இயக்கத்தில் மதகஜராஜா என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் 2013 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இந்த படம் ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால் அந்தப் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போன நிலையில் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு பொங்கல் பண்டிகையின் போது தற்போது ரிலீஸ் ஆக உள்ளது. இதனை முன்னிட்டு நேற்று பல நிகழ்ச்சி நடைபெற்ற போது அதில் இயக்குனர் சுந்தர் சி மற்றும் நடிகர் விஷால் உட்பட குழுவினர் கலந்து கொண்டனர்.
அப்போது மேடையில் பேசிய விஷால் கை நடுக்கத்துடன் நா தழுதழுத்தபடி பேசினார். அவருடைய கைகள் தொடர்ந்து நடுங்கி கொண்டே இருந்த நிலையில் உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை கைத்தாங்கலாக அமர வைத்தனர். மேலும் இது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் நடிகர் விஷாலுக்கு காய்ச்சல் இருந்ததாகவும் குளிர் அதிகமாக இருந்ததால்தான் அப்படி நடுக்கமாக காணப்பட்டார் என்றும் விளக்கம் கொடுத்துள்ளனர். இந்த வீடியோ வெளியாகி தற்போது விஷால் ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நடிகர் விஷால் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தற்போது சென்னை அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக நடிகர் விஷால் முழுமையாக ஓய்வில் இருக்க வேண்டும் எனவும் அந்த மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments