ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக மற்றும் தேமுதிக ஆகிய காட்சிகள் போட்டியிடவில்லை என்று அறிவித்தது. முன்னதாக தமிழக வெற்றிக்கழகமும் போட்டியிடவில்லை என அறிவித்தது. திமுக கட்சி போட்டியிடும் நிலையில் நாம் தமிழர் கட்சியும் களம் காண்கிறது.
இந்நிலையில் பாஜக ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுமா என்று எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் புறக்கணிப்பதாக பாஜக அறிவித்துள்ளது. மேலும் அதன்படி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
0 Comments