திருப்போரூர்: மிதவை படகு உணவகத்தை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்


செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஊராட்சி ஒன்றியம் முட்டுக்காடு ஊராட்சியில் மிதவை படகு உணவகத்தை  சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்  தா.மோ.அன்பரசன் மற்றும்  சுற்றுலாத்துறை அமைச்சர்  இரா.இராஜேந்திரன் அவர்களால் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைக்கப்பட்டது.  

உடன்  சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்.ஆர்.எல். இதயவர்மன், முட்டுக்காடு முதல் நிலை ஊராட்சி மன்ற தலைவர்  P. சங்கீதா மயில்வாகணன்  M. மயில்வாகணன்  தி. மு. க,காஞ்சி வடக்கு மாவட்ட பிரதிநிதி அவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். உடன்  தி மு க நிர்வாகிகள், ஊராட்சி மன்ற துணை தலைவர்  G. விஜயா கோபிநாத், வார்டு உறுப்பினர்கள், மிதவை படகு நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.





Post a Comment

0 Comments