ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு..... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

 


தமிழகத்தில் இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்பட இருக்கிறது. அதன்படி சென்னை சைதாப்பேட்டையில் உள்ள 169-வது வார்டில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை முதல்வர் ஸ்டாலின் தற்போது தொடங்கி வைத்துள்ளார்.

இன்று முதல் ஜனவரி 13ஆம் தேதி வரை 2.12 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. அதன்படி ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு போன்றவைகள் வழங்கப்பட இருக்கிறது. மேலும் கூட்ட நெரிசலை  தவிர்ப்பதற்காக காலை மற்றும் மாலை என தலா 100 பேருக்கு வழங்க திட்டமிட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments