சாலைப்புதூர் தொடக்கப்பள்ளிக்கு கல்வி உபகரணங்களைபேரூராட்சி தலைவர் ராஜன் வழங்கினார்


சாலைப்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

பாவூர்சத்திரம் அருகே சாலைப்புதூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்  கிரெடிட் ஆக்சஸ் இந்தியா பவுண்டேசன் ஆலங்குளம் கிளையின் சார்பில் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியை சரோஜா வரவேற்றார். பள்ளிக்கு இரண்டு மேஜை, இரண்டு சேர், இரண்டு பீரோ, ஸ்டீல் ரேக் ஒன்று, இரண்டு பெஞ்ச், டெஸ்க், நான்கு வட்ட மேசை பதினாறு சேர், இரண்டு மின்விசிறி ஆகியவை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற தலைவர் பி.எம்.எஸ்.ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.   கிரெடிட் ஆக்சஸ் இந்தியா பவுண்டேசன் பிராந்திய மேலாளர் பழனிக்குமார், பகுதிமேலாளர் குமாரதாஸ், கிளை மேலாளர்கள் சத்தியா, நித்யா, சந்தோஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில்  உதவி ஆசிரியை உச்சினிமாகாளி நன்றி கூறினார்.

Post a Comment

0 Comments