திருச்செங்கோட்டில் நவீன ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது இந்த போட்டிகளில் குழந்தைகள் பெண்கள் என பலரும் கலந்து கொண்டு விளையாடி மகிழ்ந்தனர்


நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நவீன ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நந்தவனம் தெரு பகுதியில் ஆண்டுதோறும் நவீன ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்.

 ஒரு திடலில்  வட்டம் வரைந்து அதன் நடுவே போட்டியாளரை நிற்க வைப்பார்கள் போட்டியாளரின் கண்கள் கட்டப்பட்டு அவரது ஒரு காலில் கயிறு கட்டப்படும் கயிறின் மற்றொரு முனை கோழியின் ஒரு காலில் கட்டப்படும் வட்டத்தை தாண்டாமல் போட்டியாளர் கோழியை பிடிக்க வேண்டும் என்பதே விதி குறிப்பிட்ட நேர அளவிற்குள் கோழியை பிடிக்க வேண்டும் என்பதும்  கோழியை பிடிக்கச் செல்லும்போது வட்டத்தை தாண்டி சென்று விட்டாலோ அல்லது குறிப்பிட்ட நேரத்திற்குள் கோழியை பிடிக்க முடியாமல்  இருந்தாலோ அவர்கள் தோல்வி அடைந்ததாக கருதப்படுவார்கள்.

 குறிப்பிட்ட கால அளவுக்குள் வட்டத்தை தாண்டாமல் கோழி பிடிப்பவர்கள் வெற்றியாளர்களாக கருதப்படுவார்கள் இந்த போட்டியில் குழந்தைகள் பெண்கள் என பலரும் கலந்து கொண்டு கோழியை  பிடித்தனர் மாடுகளை பிடிப்பது ஜல்லிக்கட்டு போட்டி என்றால் கோழியை பிடிப்பது நவீன ஜல்லிக்கட்டு போட்டியாகும் இந்த போட்டிக்கு திருச்செங்கோடு பகுதியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது வீரத்திற்கு ஜல்லிக்கட்டு போட்டி என்றால் விவேகத்திற்கு நவீன ஜல்லிக்கட்டு போட்டி என்றால் மிகை இல்லை இதுகுறித்து  போட்டி ஏற்பாட்டாளர் தேவேந்திரன் என்பவர் கூறும் போது நவீன ஜல்லிக்கட்டு போட்டிகள் என்பது கோழியின் காலில் ஒரு கயிறு கட்டப்பட்டு போட்டியாளரின் காலில் மற்றொரு கயிறு கட்டப்பட்டு ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் குறிப்பிட்ட கால அளவிற்குள் கோழியை பிடிக்க வேண்டும் என்பது நிபந்தனை இந்த போட்டியில் பெண்கள் குழந்தைகள் சிறுவர் சிறுமியர் என பலரும் மகிழ்ச்சியுடன் விளையாடுகிறார்கள் எங்கள் தெருவில் நடக்கும் இந்த போட்டியை காண கேரளா கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்து உறவினர்கள் வருவது வழக்கம் இந்த போட்டியில் கோழியைப் பிடித்த பெண் சூர்யா கூறும் போது இங்கு நவீன ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது.

 இந்த நவீன ஜல்லிக்கட்டு போட்டிகளில் பெண்கள் சிறுவர் சிறுமியர் என பலரும் கலந்து கொள்ளலாம் ஜல்லிக்கட்டு போட்டி ஆண்களுக்கானது அதில் பெண்கள் பங்கேற்பதில்லை ஆனால் இந்த போட்டிகளில் பெண்கள் பங்கேற்று விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார் இந்த போட்டிகள் அனைவரையும் கவர்ந்து உள்ளன என்று கூறினார் போட்டிகளில் சிறுவர் சிறுமியர் பெண்கள் என பலரும் கலந்து கொண்டனர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது வீரத்திற்கு ஜல்லிக்கட்டு போட்டி என்றால் விவேகத்திற்கு நவீன ஜல்லிக்கட்டு போட்டியாகும் என்பதே உண்மை.



செய்தியாளர் ஜெ.ஜெயக்குமார்

Post a Comment

0 Comments