பழவேற்காடு லைட் ஹவுஸ் கடற்கரையில் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தும் நிகழ்ச்சி....
திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு லைட்ஹவுஸ் கடற்கரையில் தமிழக அரசால் தொடங்கப்பட்ட மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. பிளாஸ்டிக் மாசு பாட்டால் ஏற்படும் அச்சுறுத்தலை எதிர்த்து போராடும் அதே வேளையில் துணி பைகள் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளை பயன்படுத்தும் பாரம்பரிய தமிழ் நடைமுறையை மீண்டும் உயிர்ப்பிப்பதை நோக்கமாக கொண்ட ஒரு முதன்மை முயற்சியாக பழவேற்காடு லைட் ஹவுஸ் கடற்கரையை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி விழிப்புணர்வு பேரணியுடன் நடைபெற்றது.
விழிப்புணர்வு பேரணியை பொன்னேரி சார் ஆட்சியர் ஆகிய சங்கத் பல்வந்த் மார்க்கெட் பகுதியில் துவக்கி வைத்தார் தூய்மை காவலர்கள் தன்னார்வலர்கள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்ட இப்ப பேரணி லைட் ஹவுஸ் கடற்கரையை சென்றடைந்து கடற்கரையில் காணப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டது.
தூக்கி எறியும் பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கும் குறிப்பாக கடல் வாழ் உயிரினங்களுக்கும் ஏற்படும் பாதிப்பை சார ஆட்சியர் பொதுமக்களுக்கு விளக்கி கூறி தூக்கி எரியும் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாவதை தடுக்க வேண்டும் என்பதன் அவசியத்தையும் இதேபோன்று மக்கள் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முக்கியத்துவத்தை எடுத்து கூறினார் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய கும்மிடிப்பூண்டி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் லிவிங்ஸ்டன் வனச்சரக அலுவலர் ரூபஸ் லெஸ்லி வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜ் குணசேகரன், திருப்பாலைவனம் காவல்துறை ஆய்வாளர் காளிராஜ், உதவி ஆய்வாளர் மனோவா செபாஸ்டின்,வன அலுவலர் நரசிம்மன்,வருவாய் ஆய்வாளர் பிரேம்,ஊராட்சி செயலர்கள் குமார்,தினேஷ்,சமூக ஆர்வலர்கள் அசோக் பிரியதர்ஷன்,ஹாஜா மொய்தீன்,ஏகாட்சரம் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
No comments