பாவூர்சத்திரத்தில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ, அண்ணாமலை கலந்து கொண்டார்.
பாவூர்சத்திரத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் பாலன்பு ராஜா தலைமை வகித்தார். தென்காசி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, நிர்வாகிகளுடன் கலந்துரையாடி, ஆலோசனை மேற்கொண்டார்.
இதில் நிர்வாகிகள் ஜெயராஜ், பாலா (எ) பாலசுப்பிரமணியன், பால்ராஜ், சுடலைமணி, சேகர், வேல்சாமிபாண்டியன், ராஜன், மாயகிருஷ்ணன், கதிரேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments